போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த யாழில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கைது

Sri Lanka Police Batticaloa Jaffna Arrest
By Bavan May 12, 2026 02:52 PM GMT
Report

 போக்குவரத்து காவல்துறையினரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் யாழ் கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை இன்று செவ்வாய்கிழமை (11) கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 4ம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவரை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டனர்

கோப்பாய் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி

இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் காவல்துறையினரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை காட்டியுள்ளார் குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் கடந்த 2024 ம் ஆண்டு யாழ் கோப்பாய் காவல்துறை பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் காவல்துறையினரால் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.

போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த யாழில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கைது | Police Officer Arrested Producing Fake License

இந்த நிலையில் கோப்பாய் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த காத்தான்குடியைச் சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி( 01.08.2024) தற்காலிகமாக சாரதி அனுமதி பத்திரம் ஒன்றை வழங்கியதுடன் அதனை தொடர்ந்து போலியான கோப்பாய் காவல் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி தற்காலிக போலியான சாரதி அனுமதி பத்திரத்தை 8 முறை நீடித்து கொடுத்துள்ளார்.என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பறந்த கடிதம்

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பறந்த கடிதம்

 காவல்துறை உத்தியோகத்தர் கைது

இதனையடுத்து குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர் இறப்பர் முத்திரை ஒன்றை மீட்டதுடன் போலி தற்காலிகமான சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த குறித்த நபரை கைது செய்து மட்டு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதையடுத்து அவரை இன்றுவரை (12)விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த யாழில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கைது | Police Officer Arrested Producing Fake License

இதன் பின்னர் போலியான ஆவணங்களை தயாரித்து வழங்கி வந்த குறித்த காவல்துறை கான்ஸ்டபிளை இன்று செவ்வாய்க்கிழமை காவல்நிலையத்துக்கு வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்ய அழைப்பு விடுத்த நிலையில் அங்கு சென்ற அவரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவரை நாளை 13 ம் திகதி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.       

இத்தாலிய காவல்துறையில் உயர் பதவியில் நியமனம் பெற்ற இலங்கை பெண்

இத்தாலிய காவல்துறையில் உயர் பதவியில் நியமனம் பெற்ற இலங்கை பெண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

     

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்