ஹெரோயினுடன் காவல்துறை அதிகாரி கைது
arrest
heroin
police officer
By Jaso
ஹெரோயின் வைத்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை கல்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய புத்தளம் வைத்தியசாலைக்கு முன்பாக சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 50 கிராம் ஹெரோயினுடன் நுரைச்சோலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் புத்தளம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.