இணையம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து -அதிரடியாக களமிறங்கிய காவல்துறை
police
raid
online party
By Jaso
வெலிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட மிதிகம பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தொன்றை சுற்றிவளைத்த காவல்துறையினர் போதைப்பொருளுடன் 12 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இணையம் ஊடாக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 1 கிராம், 625 மில்லிகிராம் கொக்கெய்ன், 01 கிராம் ஐஸ், 3 கிராம், 600 மில்லிகிராம் கேரள கஞ்சா, 02 கிராம், 25 மில்லிகிராம், ஹசீஸ் 25 கிராம், ஹஷிஸ் 700 கிராம் என்பன காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.