காவல்துறையினருக்கு நடக்கப்போகும் கட்டாய பரிசோதனை
Sri Lanka Police
Drugs
By Sumithiran
பணி இடைநிறுத்தம் உட்பட எந்தவொரு காரணத்திற்காகவும் கடமையில் இருந்து விலகிய காவல்துறை உத்தியோகத்தர்கள் மீண்டும் பணியில் இணையும் போது போதைப்பொருள் பரிசோதனையை கட்டாயமாக்கி பதில் காவல்துறை மா அதிபர் (ஐஜிபி) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல்துறையின் தகவலின்படி அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய போதைப்பொருள் பரிசோதனை
எனவே, மீண்டும் பணியில் சேரும் அனைத்து காவல்துறையினரும் காவல்துறை மருத்துவமனையில் கட்டாய போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு காவல்துறை அதிகாரியும் பணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று பதில் காவல்துறை மா அதிபர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்