மட்டக்களப்பில் நோயாளிப் பெண்ணை வீதியில் விட்டுச்சென்ற நபர்கள் : காவல்துறையினர் மீட்பு
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
By Bavan
மட்டக்களப்பு, திருப்பெருந்துறை வீதியில் நோயாளியான பெண் ஒருவரை அநாதரவாக விட்டுச்சென்ற நிலையில் காவல்துறையினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
நேற்று (26) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
119 எனும் காவல்துறை அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது மனித நடமாட்டம் இல்லாத வீதியில் குறித்த பெண்ணை இனம்தெரியாதோர் விட்டுவிட்டு தப்பியோடியுள்ளமை தெரிய வந்துள்ளது.

கடும் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பெண்ணை பிற்பகல் 1.00 மணியளவில் அம்புலன்ஸ் மூலம் மட்டு போதனா வைத்தியாலைக்கு கொண்டு சென்று அவரை அங்கு சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி