இவரைத் தெரியுமா? பொதுமக்களின் உதவியை கோரும் காவல்துறை (படம் இணைப்பு)
arrest
police
people
assistance
By Sumithiran
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
வெலிக்கடை, இராஜகிரிய, பெலவத்தை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் சந்தேகநபர் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபரின் புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர். அந்த தொலைபேசி எண்கள், 071 - 8591762 071 - 8594921 071 - 8594913