காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விசனம்
காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், இன்று (18) நினைவேந்தலை மேற்கொண்ட கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் மிரட்டி அடாவடித்தனமாக நடந்துக்கொண்டனர்.
காவல்துறையினரின் அடாவடித்தனம்
இது தொடர்பாக சம்பவத்துடன் தொடர்புடைய மாணவரொருவர் தெரிவிக்கையில், “நாங்கள் சட்டவிரோதமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, இறந்த எங்களின் உறவுகளுக்காகவே அஞ்சலி செலுத்துகின்றோம்.
இந்த நிலையில், நாங்கள் முன்னெடுத்த இந்த நிகழ்வில் காவல்துறையினர் பெரிய அராஜகத்தை நிகழ்த்தியுள்ளனர்.
இதனடிப்படையில், காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |