தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரை: போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய காவல்துறையினர்!
யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திஸ்ஸ விகாரைக்கு அருகில் இன்று (24) எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவ்விடத்திற்கு வருகை தந்த பலாலி (Palali) காவல் நிலைய பொறுப்பதிகாரியை நோக்கி போராட்டக்காரர்கள் எதிர்ப்பு வெளியிடும் வகையில் பல்வேறு கோசங்களை எழுப்பியுள்ளனர்.
அச்சுறுத்திய காவல்துறையினர்
இதன்போது, குறித்த காவல்துறையினர் போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மேலும், அவர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திஸ்ஸ விகாரையானது தமிழ் மக்களது காணிகளை அபகரித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |