திடீரென மேல் மாகாணத்தில் களமிறக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள்
corona
sri lanka
people
By Shalini
மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத, 369 பஸ்களின் சாரதிகள் மற்றும் 67 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்களின் சாரதிகளுக்கும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் 581 கடைகளின் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்தில் நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த தேடுதல் நடவடிக்கையில் 437 காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.