வங்கியின் ஊடாக பரிசில்கள் : பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாகவும் எனவே இந்த ஏமாற்று தகவல்களில் பலியாகவேண்டாம் என காவல்துறை திணைக்களம் பொதுமக்களை தெரிவித்துள்ளது.
வங்கிகளில் இருந்து பரிசுகளை வழங்குவதாகக் கூறி தற்போது சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி பகிரப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆபத்தான மோசடி செய்தி
இந்தச் செய்தி ஒரு மோசடியான மற்றும் மிகவும் ஆபத்தான மோசடி செய்தி என்றும், இது தனிப்பட்ட தகவல்களைத் திருடவும், கைபேசிகளின் மென்பொருளை மாற்றியமைக்கவும் கூட பயன்படுத்தப்படுகிறது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கணினி அவசரகால பதில் மன்றத்திற்கு பல புகார்கள் வந்துள்ளன, மேலும் அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்தா கூறுகையில், மொபைல் போன்கள் மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலி செய்திகள். தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
