யாழில் உழவு இயந்திரத்தால் மோதி காவல்துறை அதிகாரி கொலை
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து காவல்துறை குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை குழுக்கள்
இவ்வாறு உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிறெட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விசேட காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - கஜிந்தன் , பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |