யாழில் இடம்பெறவுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள்!

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Tamils Jaffna Political Development
By Theepan Oct 10, 2026 11:29 AM GMT
Report

அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி.அ. யோதிலிங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (09.10.2026) அதிகாலை தனது 70ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

யோதிலிங்கம் அவர்களின் இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை (12.10.2026)  காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் - குப்பிழான் பகுதியில் இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக நேற்று முன்தினம் வியாழக்கிழமை (08.10.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இலங்கை தூதுவர்: உடல் நிலை குறித்து தகவல்

சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இலங்கை தூதுவர்: உடல் நிலை குறித்து தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்

யாழ்ப்பாணம் - குப்பிழான் மண்ணில் பிறந்த சி.அ. யோதிலிங்கம், தொழில் நிமித்தம் நீண்டகாலம் கொழும்பில் வசித்ததுடன், பின்னர் உரும்பிராயிலும் வசித்து வந்தார்.

அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர், கல்வியியலாளர் எனப் பல்துறை ஆற்றல்களைக் கொண்டிருந்த அவர், அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

யாழில் இடம்பெறவுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள்! | Political Analyst Jothilingam Funeral Rites Jaffna

1970ஆம் ஆண்டு அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினராகப் பங்கெடுத்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

அதன்பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சூழலிலும், ஈழத்து அரசியல் களத்திலும் தீவிரமாக இயங்கி வந்தார். தமிழர் தேசத்தின் அரசியல் விடுதலைக்காக தனது 16ஆவது வயதிலேயே செயற்படத் தொடங்கிய அவர், வாழ்வின் இறுதி வரை கொள்கை மாறாது உறுதியுடன் பயணித்தார்.

தமிழ்த்தேசிய அரசியல் வெளியில் தனக்கெனத் தனித்துவமான அடையாளத்தையும் உருவாக்கினார். ஈழத்து அரசியல் மற்றும் தமிழ்த்தேசியம் தொடர்பான பல தசாப்தகால ஆய்வுகளில் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், பல முக்கிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

உலக சந்தைக்கு நிகராக இலங்கையில் அதிகரிக்கப்படாத எரிபொருள் விலை : அமைச்சர் அறிவிப்பு

உலக சந்தைக்கு நிகராக இலங்கையில் அதிகரிக்கப்படாத எரிபொருள் விலை : அமைச்சர் அறிவிப்பு

அஞ்சலி செலுத்துகின்றனர்

மலையக மக்கள் தொடர்பான கொள்கை விவாதங்களை முன்னெடுத்ததுடன், மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

யாழில் இடம்பெறவுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள்! | Political Analyst Jothilingam Funeral Rites Jaffna

இந்தநிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்த அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (12.10.2026) காலை 10 மணியளவில் குப்பிழான் தெற்கு, வீரமனை பகுதியில் அமைந்துள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து அவரது புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குப்பிழான் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

யோதிலிங்கத்தின் உடலுக்கு அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது சிங்களவர்களுக்கு வெற்றியே : ரவிகரன் எம்.பி பகிரங்கம்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது சிங்களவர்களுக்கு வெற்றியே : ரவிகரன் எம்.பி பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024