A/L பெறுபேற்று பொன்னாடைகள் முதல் ஹோர்முஸ் நீரிணை வரை அரசியல்..
உலகப்பரப்பில் ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்தி அமெரிக்க தலைமைத்துவத்துக்கு உள்ள We break it, You own it என்ற முணுமுணுப்பை போல அதாவது நாங்கள் செய்தால் ஏனைய நாடுகளான நீங்கள்தான் அதானால் பலனெடுப்பீர்கள் முணுமுணுப்பைபோல அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகளில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களிடம் ஒரு முணுமுணுப்பு வருமோ என்ற ஐயம் வருகிறது.
ஏனெனில் கடினப்பட்டு படித்து பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கும் அவர்களை ஊக்கப்படுத்திய அவர்களின் பெற்றோருக்கும் அவர்களுக்கு கல்விப்பங்களிப்பு வழங்கிய பாடசாலை சமுகத்துக்குமே இந்த உரித்துகள் உண்டென்றாலும் தமிழ் அரசியல்வாதிகளின் பொன்னாடை போர்ப்பு நகர்வுகளை பார்த்தால் இதுவும் ஒருவகையில் We break it, You own it பாணிபோலத்தான் உள்ளது.
மாணவர்கள் கஸ்ரப்பட்டு படித்து பெறுபேற்றைப்பெற்றதால் வரக்கூடிய உற்றுநோக்கலில் ஒட்டிநின்று தமக்கும் வெளிச்சத்தை பெறுவதற்றகாக பொன்னாடைகளை போர்த்த முன்டியடிக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த விடயத்தில் தார்மீக உரித்துக்குரிய பங்களிப்பு மிகசொற்பமே.
எனினும் அந்த அரசியல்வாதி அந்த மாணவனுக்கு பொன்னாடை போர்த்தினார் இந்த அரசியல்வாதி இந்த மாணவிக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கினார் என்ற செய்திகள் ஏட்டிக்குப்போட்டியாக வருகின்றன.
சிறந்தபெறுபேறுகளை பெற்ற ஒரிரு மாணவர்களுக்கு அரசியல்வாதிகள் முண்டியடித்து பொன்னாடைகளை போர்த்தும் குறியீட்டுகாட்சிகளால் யாழ் மாவட்டத்தில் வீழ்ச்சியடைந்த கல்வித்தரத்துக்கு எந்தவித தீர்வுகளும் வந்துவிடப்போவதில்லை என்ற யதார்த்தத்துடன் உள்ளுர் மற்றும் உலக நிலவரங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்