மஹேலவின் பதவி விலகலை அடுத்து மும்பை இந்தியன்ஸிற்கு நியமிக்கப்பட்ட புதிய பயிற்சியாளர்
மஹேல ஜெயவர்தன பதவி விலகியதை அடுத்து வெற்றிடமான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில், முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவர் கீரோன் பொல்லார்ட்டை நியமிக்க அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐபிஎல்) கருத்தில் கொண்டு இந்த புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தை முறித்த மஹேல
மஹேல ஜெயவர்தன சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார்.

2010-ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த பொல்லார்ட், 2022 வரை ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஒரே வீரர் ஆவார்.
மும்பை இந்தியன்ஸ் வீரர்
அந்தக் காலகட்டத்தில் அவர் 189 போட்டிகளில் விளையாடி, 3,412 ஓட்டங்கள் மற்றும் 69 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பொல்லார்ட் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார்.
2022 சீசனுக்குப் பிறகு வீரராக ஓய்வு பெற்ற அவர், பின்னர் மும்பை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |