பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!
உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் வருடத்தின் தொடக்கத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை தைப்பொங்கல் ஆகும்.
இந்த பண்டிகையின் மையக் கதாபாத்திரங்கள் உழவர்களும், அவர்களின் உழைப்புக்கு துணை நிற்கும் உழவுக் காளைகளும் ஆகும்.
சூரிய பொங்கல்
கதிர் அறுவடை நிறைவடைந்த மகிழ்ச்சியில், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உருவானதே பொங்கல் திருநாள். சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் நுழையும் நாளையே தை மாதப் பிறப்பாகக் கருதுகின்றோம்.

அந்த அடிப்படையில், இந்த ஆண்டு தைப்பொங்கல் நாளை வியாழக்கிழமை(15) கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் பொங்கல் வைக்க ஏற்ற நேரங்கள் குறித்து அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
பாரம்பரியமாக, சூரியன் உதிக்கும் முன்பே, அதாவது காலை 6 மணிக்கு முன் பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபடுவது சூரிய பொங்கலாகக் கருதப்படுகிறது.
பொங்கல் வைக்க உகந்த நேரம்
இந்த நேரத்திற்கு குறிப்பாக நல்ல நேரம் கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. காலை 6 மணிக்குப் பிறகு பொங்கல் வைக்க விரும்புவோர், சுப நேரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதன்படி, காலை 7.45 முதல் 8.45 வரை மற்றும் காலை 10.35 முதல் பகல் 1 மணி வரை பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை
கௌரி நல்ல நேரம்: மாலை 6.30 முதல் 7.30 வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 வரை
ராகு காலம்: பிற்பகல் 1.30 முதல் மாலை 3 மணி வரை
இந்த நேரங்களை கருத்தில் கொண்டு, தைப்பொங்கலை பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |