கனடாவில் மீண்டும் நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வு !
தமிழ் மக்களின் கோரிக்கையும் மற்றும் விடுதலை போராட்டத்தினுடைய இலக்கும் ஒன்றே என்பதை மீண்டும் இந்த உலகுக்கு உணர்த்துவதற்காகவே பொங்குதமிழ் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொங்குதமிழ் நிகழ்விற்கான ஊடக இணைப்பாளர் பொன்னையா விவேகானந்தர் (Ponnaiya Vivekananda) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழில் இடம்பெற்ற அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொங்குதமிழ் நிகழ்வு
கனடியத் (Canada) தமிழ்ச் சமூகமும் தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் பொங்குதமிழ் நிகழ்வு கனடாவின் ஸ்காபரோ முற்றவெளியில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் இந்நிகழ்வு தொடர்பில் ஊடக இணைப்பாளர் மேலும் தெரிவித்தமை பின்வருமாறு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
