பொன்னாவெளி விவகாரம்: சிறீதரனின் மௌனத்திற்கான காரணத்தைப் போட்டுடைத்த கமக்கார அமைப்பினர்

Sri Lankan Tamils Kilinochchi Douglas Devananda S. Sritharan Japan
By Sathangani Apr 09, 2024 07:49 AM GMT
Report

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (Sivagnanam Shritharan) விசுவாசியான பூநகரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் உறவினரே டோக்கியோ நிறுவனத்திற்கு கிளிநொச்சி பொன்னாவெளியில் உள்ள தனது காணியை அதிக விலைக்கு விற்பனை செய்தார் என கிராஞ்சி கமக்கார அமைப்பின் செயலாளர் ஜெ. நங்களலேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொன்னாவெளிப் பிரதேசம் மக்கள் யாரும் வசிக்க முடியாத வயல் நிலங்கள் மற்றும் உவரான பிரதேசமாக காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தில் சுண்ணாம்புக்கல் அகழ்வுக்காக டோக்கியோ நிறுவனம் தமது தற்காலிக கூடாரம் ஒன்றை அமைப்பதற்கு காணிகளைத் தேடினார்கள்.

ஸ்பெயினில் இரத்த மழை: பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஸ்பெயினில் இரத்த மழை: பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!

டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்ட போது

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் விசுவாசியான பூநகரிப் பிரதேச சபையின் தவிசாளரின் உறவினரின் சுமார் ஆறு ஏக்கர் காணியை அதிக விலைக்கு குறித்த நிறுவனத்திற்கு விற்பனை செய்தார்கள்.

பொன்னாவெளி விவகாரம்: சிறீதரனின் மௌனத்திற்கான காரணத்தைப் போட்டுடைத்த கமக்கார அமைப்பினர் | Ponnaveli Limestone Excavation Sritharan Silence

அவர்கள் ஏன் அன்று அவ்வாறு செய்தார்கள். இந்தப் பிரதேசத்தில் என்ன திட்டம் வரப்போகிறது என்பதும் அவர்களுக்கு தெரியும். தெரிந்தே காணியை அதிக விலைக்கு விற்பனை செய்தார்கள். இந்த விடயங்கள் சி.சிறீதரன் எம்பிக்கு தெரியாதா? அவர்களுக்கே தெரியும்.

இன்று பொன்னாவெளியைப் பற்றிப் பேசுபவர்கள் அந்தப் பிரதேசத்தை உவர் நீரில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு அணையைக் கூட கட்டுவதற்கு நிதி ஒதுக்க முடியாதவர்களாக காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) நியமிக்கப்பட்ட நிலையில் பொன்னாவெளியில் சுண்ணக்கல் தொடர்பான ஆய்வு மேற்கோள்வது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது சிறீதரன் எம்.பி மௌனமாக இருந்தார்.

முழு சூரிய கிரகணம்: கனேடியர்களால் முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை

முழு சூரிய கிரகணம்: கனேடியர்களால் முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை

பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு 

அங்கு, மௌனமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பொன்னாவெளியில் வசிக்காத தனது ஆதரவாளர்களை அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்தினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொன்னாவெளியில் 2000 தொடக்கம் 3000 வரையான வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்போம் என வாக்குறுதி அளித்தமை இந்த தொழிற்சாலையை நிறுவுவதற்கான முன்னாயத்தமே.

பொன்னாவெளி விவகாரம்: சிறீதரனின் மௌனத்திற்கான காரணத்தைப் போட்டுடைத்த கமக்கார அமைப்பினர் | Ponnaveli Limestone Excavation Sritharan Silence

நல்லாட்சி அரசாங்கத்தில் பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு ஆய்வு தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெற்றபோது மௌனமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது அரசியல் ரீதியான காரணங்களுக்காக திட்டத்தை குழப்பம் முற்படுகின்றனர்.

பொன்னாவெளியில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களை குழப்புவதற்கு அந்தப் பிரதேசங்களுடன் சம்பந்தப்படாத வெளியாட்களை கொழும்பிலிருந்தும் வேறு பகுதிகளிலும் இருந்தும் அழைத்து வந்தனர்.

ஈழத் தமிழர்களுக்கு நடந்த அநீதி..! திமுக காங்கிரஸ் கட்சிகளே பொறுப்பு: ராஜ்நாத் சிங்

ஈழத் தமிழர்களுக்கு நடந்த அநீதி..! திமுக காங்கிரஸ் கட்சிகளே பொறுப்பு: ராஜ்நாத் சிங்

பொன்னாவெளிப் போராட்டங்களில் கலந்து கொள்ளாத சிறீதரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பொன்னாவெளியில் தொழிற்சாலை ஆரம்பித்து வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்றால் ஏன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதைச் செய்யக்கூடாது.

பொன்னாவெளி விவகாரம்: சிறீதரனின் மௌனத்திற்கான காரணத்தைப் போட்டுடைத்த கமக்கார அமைப்பினர் | Ponnaveli Limestone Excavation Sritharan Silence

இங்கு பிரச்சனை டோக்கியோ நிறுவனத்தின் சுண்ணாம்பு அகழ்வு அல்ல, டக்ளஸ் தேவானந்தா செய்வதை தடுக்க வேண்டும் இல்லாவிட்டால் கிளிநொச்சி வாக்குகள் அவருக்கு சென்று விடும் என்ற குரோத அரசியலே காரணம்.

பொன்னாவெளியைப் பற்றி கவலைப்படும் சிறீதரன் எம்.பியிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். தையிட்டி விகாரைப் போராட்டத்திற்கு செல்கிறீர்கள், வெடுக்கு நாறி, குருந்தூர் மலைப் போராட்டத்திற்கு செல்கிறீர்கள். ஏன் உங்களால் பொன்னாவெளிப் போராட்டங்களுக்கு வர முடியாதுள்ளது.

தென்னிலங்கைக்கு ஒரு முகத்தையும் கிளிநொச்சியில் ஒரு முகத்தையும் காட்டிக் கொள்ளும் சிறீதரன் போன்றோரின் அரசியலை மக்கள் நம்பி ஏமாந்து விடாமல் தமக்கான அபிவிருத்திகளை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்துக்கு பறந்தார் மைத்திரி!

தாய்லாந்துக்கு பறந்தார் மைத்திரி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023