போராட்டம் திரைப்படம் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் திரையரங்குகளில்
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். ‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) புகைப்படத்தில் அவர் உதைப்பந்தாட்ட வீரராக தோன்றியுள்ளமை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |