முல்லைத்தீவில் தொடரும் அடையாள பணிப்புறக்கணிப்பு: தபால் சேவைகள் ஸ்தம்பிதம்(படங்கள்)
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் நேற்றைய தினம்(12)இரண்டாவது நாளாக தொடர்ந்ததால், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
நுவரெலியா தபால் நிலையம் உட்பட தபால் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தபால் சேவை பாதி்ப்பு
இதனால் தபால் நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அத்துடன், 2024 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |