பேரெழுச்சி கொண்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்! செய்தியாளர்கள் மீது தாக்குதல்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) நடைபெற்ற போராட்ட ஊர்வலத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்கள், மீது வெள்ளை வானில் வந்தவர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்களான ரஜிந்தன், உசாந்தன், ஆகியோர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது மூவரும் காயமடைந்தனர்.
வெள்ளை வான் சாரதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் டீசேர்ட் அணிந்திருந்ததாக சம்பவ இடத்தில் இருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் முள்ளிவாய்க்கால் அருகே சென்றபோது, வட்டுவாகல் பாலத்தில் போராட்டத்தை செய்தியாக்கிக் கொண்டிருந்த ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்கள் மீது CAK 2376 என்ற இலக்கத் தகடு கொண்ட வாகனம் வேண்டுமென்றே மோதியது.
P2P எதிர்ப்புகள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள், அரசாங்க ஆதரவு ஆதரவாளர்கள் மற்றும் இலங்கை பாதுகாப்புப் படை அதிகாரிகளிடமிருந்து மிரட்டல் மற்றும் வன்முறையை எதிர்கொள்ளும் தமிழ் ஊடகவியலாளர்களின் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
