செயலிழந்துள்ள நுரைச்சோலையின் மின்னுற்பத்தி தொகுதி..! சீரமைப்பு தொடர்பில் வெளியான தகவல்
இரண்டாம் இணைப்பு
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியை சீரமைக்க குறைந்தது 14 முதல் 16 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் மின்விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும் கால எல்லையினை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) முதல் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது.
இதன்காரணமாகவே இவ்வாறு மின்விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக 1 மணி நேர மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த போதிலும் இன்று 1 மணிநேரம் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்படுகிறது என மின்சார சபை தெரிவித்திருந்தது.
இருப்பினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இவ்வாறு 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
அதிகரிக்கப்பட்ட மின் வெட்டு நேரம்..! இன்று திங்கட்கிழமைக்கான மின்துண்டிப்பு தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு |
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை |