வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்
Vavuniya
Power cut Sri Lanka
Power Cut Today
By pavan
வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தல் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல் வழங்கப்பட்டு வருகிறது.
முன் அறிவிப்பு
இந் நிலையில் மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் சம்பளம் கிடைத்த மறுநாள் மின் பட்டியலை செலுத்த காத்திருக்கும் நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின்சாரசபையினர் மின்சாரத்தை துண்டித்து செல்வதாக தெரிவிக்கின்றனர்.
மின்சார துண்டிப்பு தொடர்பில் முன்னறிவிப்பு இன்றி துண்டிக்கப்படுவது குறித்து மின்சாரசபை காரியாலயத்தில் பாவனையாளர்கள் சிலர் முரண்பட்டமையும் அண்மையில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி