வெளிநாடொன்றை உலுக்கிய சக்திவாய்நத நிலநடுக்கம்
                                    
                    Earthquake
                
                                                
                    Colombia
                
                                                
                    World
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெரிவித்துள்ளது.
பொகோட்டாவிலிருந்து கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் (105 மைல்) தொலைவில் உள்ள மத்திய கொலம்பியாவின் பராடெபுவெனோ நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வீதிகளுக்கு இறங்கிய மக்கள்
அதன் மையப்பகுதி குறித்த பிரதேசத்தில் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Estas son algunas imágenes de ciudadanos evacuando en Bogotá tras el fuerte temblor de 6.4 sentido sobre las 8:00 a.m. de este domingo 8 de junio. pic.twitter.com/UmOY5dOtXn
— BluRadio Colombia (@BluRadioCo) June 8, 2025
நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கி சைரன்கள் ஒலித்ததால், மக்கள் பாதுகாப்புக்காக வீதிகளுக்கு இறங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        