இந்தோனேசியாவில் பதிவான நிலநடுக்கம் :சுனாமி எச்சரிக்கை குறித்து வெளியான தகவல்
Indonesia
Earthquake
By Laksi
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது இன்று (14)அதிகாலை ஏற்பட்டுள்ளதுடன் இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.
அடிக்கடி பூகம்பங்கள்
மேலும் நிலநடுக்கமானது கிழக்கு போலாங் மோங்கோண்டோ ரீஜென்சிக்கு தென்கிழக்கே 128 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகளின் வளைவான "ரிங் ஆப் பயர்" மீது இருப்பதன் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி