விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்தின் இப்போதைய நிலை..! (படங்கள்)

Sri Lanka Sri Lanka Final War LTTE Leader Velupillai Prabhakaran
By pavan Sep 06, 2023 05:13 AM GMT
Report

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் புதுக்குடியிருப்பு என்பது ஆராத வடுக்களை கொண்ட உன்னதமான இடமாகும். ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒட்டுச்சுட்டான் வீதியிலுள்ள வீட்டிலேயே வாழ்ந்து வந்தார்.

இதன் காரணமாக இந்த இடத்திற்கும், தனி ஒரு மதிப்பு உள்ளதுடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பார்க்கப்பட்டு வந்தது.

தமிழர்களுக்கென கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் பெருமை உலகிற்கு உயர்த்திய தலைவர் பிரபாகரன் போரின் இறுதி கட்டத்தில் வாழ்ந்த இடமே புதுக்குடியிருப்பு.

ltte leader pirabakaran house

இப்படி பலரால் வியப்பாக பார்க்கப்பட்ட, பெருமைக்குரிய இடத்தின் தற்போதைய நிலை மிகப்பெரும் மன வேதனை தருவதாக அமைந்துள்ளது.

C17 தர வீதியாக இது தரப்படுத்தப்பட்டு காபற் போடப்பட்டுள்ள போதும் வீதியை சுத்தமாக பேணுவதில் பொது மக்கள் அலட்சியமாக இருக்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரகசியங்கள்: சனல் 4 வெளியிட்ட காணொளி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரகசியங்கள்: சனல் 4 வெளியிட்ட காணொளி

பொதுமக்களின் சமகால செயற்பாடுகள்

யுத்தம் மௌனிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த பகுதியும் பராமரிப்பற்று பார்ப்போர் முகம் சுழிக்கும் வகையிலும் குப்பைகளால் நிறைந்து காணப்படுகின்றமை வருத்தத்திற்குரியதே.

புதுக்குடியிருப்பு - ஒட்டுச்சுட்டான் வீதியின் இரு மருங்கிலும் பொதுமக்களால் கொட்டப்படும் கழிவுகளால் அந்த பகுதியே அசுத்தமாக்கப்பட்டுள்ளது.

ltte leader pirabakaran house

பொதுமக்கள் தங்களது வீட்டுக் கழிவுகளையும் வியாபார நிலைய கழிவுகளையும் பொறுப்பற்ற முறையில் திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர். ஒரு காலத்தில் மிக முக்கிய பகுதியாக பராமரிக்கப்பட்ட இந்த இடத்தில் பொதுமக்களின் சமகால செயற்பாடுகள் விமர்சனத்திற்குரியவையாக அமைகின்றன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரும் இது விடயமாக கவனமெடுக்காது இருப்பது வியப்புக்குரியது.

பலதடவை நலன் விரும்பிகளால் இதுவிடயமாக சுட்டிக்காட்டப்பட்டும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. இந்த வீதி நீண்டகாலமாக இப்படி கழிவுகளால் நிரப்பப்பட்டு வருகின்றது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையிலிருந்து புத்தடிப்பிள்ளையார் ஆலயம் வரையான வீதியின் இரு பக்கங்களும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. கண்ணாடிப் போத்தல்ளும் பொலித்தீன் பைகளும் அதிகமாக கொட்டப்படுவதோடு தொன்னோலைக் கழிவுகளுடன் மதுபான வெற்றுப் போத்தல்களும் கொட்டப்பட்டுள்ளன.

நினைவுச் சின்னங்கள்

அழுகி துர்நாற்றம் தரக்கூடிய விலங்குக் கழிவுகளையும் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். யுத்தம் நடைபெற்ற காலத்திலும் கூட, புதுக்குடியிருப்பு - ஒட்டுச்சுட்டான் பகுதியில், வீதியின் இரு மருங்கிலும் மலை வேம்புகள் நடப்பட்டு வீதி சுத்தமாக பேணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போது அந்த மலைவேம்புகள் வளர்ந்து பெரிய மரங்களாகி நிழல் கொடுக்கின்றன. இவ்வாறு அழகாக பேணப்பட்டு வந்த இந்த இடம் தற்போது பொதுமக்களின் பொறுப்பற்ற, செயற்பாடுகளால் துர்நாற்றம் வீசும் நிலைக்கு வந்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அங்கு வாழ்ந்த காலப்பகுதியிலும், அதன் பின்னரான நாட்களில் தென்னிலங்கையில் இருந்து வரும் பெரும்பான்மையினத்தவர்களாலும் பிரம்மிப்பாக பார்க்கப்பட்ட இந்த இடத்தின் இன்றைய நிலை என்ன என்று எம்மை நாமே கேள்விக் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ltte leader pirabakaran house

குறிப்பாக, நாட்டில் மிகக் கட்டுப்பாடுடனும், நேர்த்தியான சமூக கட்டமைப்புக்களுடனும் வாழ்ந்த பெருமை ஈழத்தமிழர்களுக்கு உண்டு. வாழ்ந்த இடங்களில் இருக்கும் பசுமையான மரங்களும், நினைவுச் சின்னங்களும் மக்களது வாழ்விடமும் அதற்கு சாட்சி.

இப்படி பெருமை கொள் சமூகமாக வாழ்ந்த எமது இனம் இன்று பொறுப்பற்ற தன்மையுடன் செயற்படுவதும், பொறுப்பில் இருப்பவர்கள் பாராமுகமாக செல்வதும் விரைவில் மாற்றியமைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

எனவே, உயர்வான இடத்தை அதே பெருமையுடன் பேண வேண்டியதும், எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டியது எமது தலையாய கடமை என்பதை நினைவில் கொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இடத்தின் இன்றைய நிலை  

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி