“வரலாற்றில் மிகப்பெரும் தலைவர்'' பிரதமர் மஹிந்தவுக்கு புகழாரம்
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் அபிவிருத்தியை ஏற்படுத்திய தலைவர் எமது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில், நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிதிஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், நிறைவு செய்ய முடியாதது என்று கூறப்பட்ட யுத்தத்தைக் கூட முடித்து வைத்தார் எனக் கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''2005இல் அவருக்கு பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனாலும், இந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டங்களை அவர் தொடர்ந்தும் முன்னெடுத்தார்.
2015ஆம் ஆண்டைப் போலவே இன்றும் அவர் மீது அவதூறு பரப்பப்படுகிறது. 2015ஆம் ஆண்டு பொய்களை பரப்பி ஆட்சிக்கு வந்தவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை விட இந்த நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்றார்கள்.
ஆனால் அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததுடன், நாட்டில் உள்ள அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள் என்றார்.