பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ரணிலுக்கு ஆதரவு
இக்கட்டான நேரத்தில் நாட்டைக் காப்பாற்றிய ரணில் விக்ரமசிங்கவுக்கு (ranil wickremesinghe)எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் ஆதரவளிக்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்(premitha bandara tennakoon) தெரிவித்துள்ளார்.
தென்னகோன் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினர் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் இந்த நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தான் நிற்பதாகவும் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கே ஆதரவு
தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கட்சியில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்க முயற்சித்தாலும் அது தனக்கு முக்கியமல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவளிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Immaterial of the decision made by political bureau of SLPP, together with majority of parliamentary members; I will continue to support president Ranil Wickramasinghe in upcoming presidential election who rescued the country at most crucial time. #SupportRanil , #Election2024 pic.twitter.com/3tRHGXiccc
— Premitha Bandara Tennakoon (@PremiTennakoon) July 29, 2024
நெருக்கடியான தருணத்தில் நாட்டைக் காப்பாற்றியவர்
மிக நெருக்கடியான தருணத்தில் நாட்டைக் காப்பாற்றியவர், ரணில் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலில் தனி வேட்பாளரை நிறுத்த சிறிலங்கா பொதுஜன பெரமுன நேற்று (29) தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அண்மையில் காலியில் நடைபெற்ற பேரணியில் பிரமித பண்டார தென்னகோனும் கலந்துகொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |