இராஜினாமா கடிதத்தை கையளித்த முக்கிய புள்ளிகள்! கோட்டாபயவின் முடிவு என்ன?
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன (Prasanna Gunasena) தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தினை சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் (Gotabaya Rajapaksa) ஒப்படைந்துள்ளார் எனவும் அதனை அவர் ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை எனவும் தென்னிலங்கை ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உடல்நலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைப் பணிப்பாளர் லலித் ஜயகொடியும் (Lalith Jayakody) தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுகாதார அமைச்சருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்வதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.