கடுமையான நிபந்தனை: முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு நீதிமன்றின் உத்தரவு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று (30) கடும் நிபந்தனைகளின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கம்பகா மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசுக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடுமையான பிணை நிபந்தனை
பிரசன்ன ரணவீர சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலனை செய்த கம்பகா மேல் நீதிமன்ற நீதிபதி, பிரசன்ன ரணவீர மற்றும் சரத் எதிரிசிங்க ஆகிய இரு சந்தேக நபர்களையும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் ஒரு ரொக்கப் பிணை மற்றும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் ஐந்து சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்
அத்துடன்,சந்தேக நபர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்,சந்தேக நபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடிப் பிரிவில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான நிபந்தனைகளின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தற்போது விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
