அக்டோபர் மாத குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசியினருக்கு நினைத்தது நிறைவேறும்
அக்டோபர் 31ஆம் தேதி வரை குரு பகவான் கடக ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
அக்டோபர் 31ஆம் தேதி வரை கடக ராசியில் இருக்கும் குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வை காரணமாக மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அவரது சஞ்சாரம் மற்றும் பார்வையின் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றமும் கிடைக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜோதிட பொது கணிப்புகள்
மேஷம் - மேஷ ராசியை சேர்ந்தவர்களின் இந்த மாதம் நல்ல வாய்ப்புகள் நிறைந்திருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடியும். இந்த அக்டோபர் மாதம் முழுவதும் உங்களுக்கு சிறப்பான காலமாக அமையும். குறிப்பாக உங்களுடைய நிதி நிலை முன்பு விட வலுவடையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதாலும் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மிதுனம் - இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு குரு பகவான் சஞ்சாரம் சாதகமான பலன்களை தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் சரியான திட்டமிடல் மற்றும் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டால் உங்களுக்கு முன்னேற்றமும் பாராட்டும் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுடைய ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நிதிநிலை தொடர்பான உங்களின் முக்கிய செயல்பாடுகள் நன்மை தரும். நீண்ட காலமாக உங்களுக்கு தொந்தரவு தரக்கூடிய பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் நல்ல வளர்ச்சியும் காண்பீர்கள்.
கடகம் - இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல விதத்தில் உங்களுக்கு நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும் . உங்களுடைய வேலை மற்றும் தொழில் தொடர்பாக கணிசமான முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களுக்கு வரவேண்டிய முடங்கி கிடந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் முன்னர் செய்த முதலீடுகள் மூலம் லாபத்தை காண்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதற்கு ஏற்ற காலம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |