கர்ப்பிணித்தாய்மாருக்கு கொவிட் தடுப்பூசி
நிபுணர்களின் கருத்துகளைப் பெற்று கர்ப்பிணித் தாய்மாருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானால், நிமோனியா ஏற்படக்கூடுமென்பதுடன் வேறு சில நோய் நிலைகளும் ஏற்படக்கூடும். இதனால் தாயின் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
இந்த நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியினை செலுத்த முடியும் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் கர்ப்பிணித்தாய்மார்கள் 70 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதுடன் நிபுணர்களின் கருத்துக்களை பெற்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசியினை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.