கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி -கலந்துரையாடல்கள் தீவிரம்
தற்போது நாட்டில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டுமா என்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக திங்கள்கிழமைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இராஜாங்கஅமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளான நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார் இருவர் சமீபத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பலரும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளனர்.
நிபுணர்களின் குழுவும் அவர்களுக்கு விரைவில் தடுப்பூசிகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.