எதற்கும் தயாராக இருங்கள்! நாடாளுமன்றத்தில் இருந்து வந்த எச்சரிக்கை
பொதுமக்கள் அடுத்த வருடத்தில் மேலும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Withanage) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் வேலைத்திட்டம் எதுவும் இல்லை, வெற்று வாக்குறுதிகளை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், நாடு தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.
இந்த வரவு - செலவுத் திட்டம் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. இதனால், மேலும் பல இன்னல்களை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.