காவல்துறை மா அதிபரை அவசரமாக சந்திக்கும் அநுரகுமார
நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கமளிக்க காவல்துறை மா அதிபரை சந்திக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார்.
வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 450 பேரில் 150 ஜே.வி.பி உறுப்பினர்கள் உள்ளதாக காவல்துறை மா அதிபர் தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்த பாரதூரமான கருத்து தொடர்பில் காவல்துறை மா அதிபரை விரைவில் சந்தித்து விளக்கமளிக்க உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ප්රචණ්ඩ ක්රියා සම්බන්ධව අත්අඩංගුවට ගත් 450ක පිරිස අතර ජවිපෙ සාමාජිකයන් 150ක් සිටින බවට පොලිස්පති තමන්ට පැවසූවා යැයි අරුන්දික ප්රනාන්දු මන්ත්රීවරයා පාර්ලිමේන්තුවේදී කළ බරපතල ප්රකාශය සම්බන්ධයෙන් කඩිනම් පැහැදිලි කිරීමක් සිදුකර ගැනීමට ජවිපෙ පොලිස්පතිවරයා හමුවීමට තීරණය කර තිබේ.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) May 19, 2022
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
