சீனாவை சென்றடைந்த ஜனாதிபதி அநுர
Anura Kumara Dissanayaka
Government of China
China
By Thulsi
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சீனாவை சென்றடைந்துள்ளார்.
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி சீனா (China) சென்றடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
முழு இராணுவ மரியாதை
ஜனாதிபதி இன்று (14) அந்நாட்டு நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங், முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதியை வரவேற்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்