சீனா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
Anura Kumara Dissanayaka
China
By Jaso
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான (china) விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
சீன தலைவர்களுடன் முக்கிய பேச்சு
இந்த பயணத்தின் போது அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி மூன்று நாள் அரசு முறை பயணமாக முதன்முதலில் இந்தியாவிற்கு சென்றிருந்தார் அநுர குமார திஸநாயக்க.
அங்கு அவர் இந்திய நிதியமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் பேச்சுவார்ததைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி