மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு : அநுர தலைமையில் அடிக்கல் நாட்டி வைப்பு

By Independent Writer Sep 16, 2026 10:34 AM GMT
Report
Courtesy: நயன்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்

நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) காலை நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பிரதான பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சுகாதார அமைச்சு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இத்திட்டத்தின் செயற்பாட்டு முகவர் சுகாதார அமைச்சு, கொழும்பு என்பதுடன், நடைமுறைப்படுத்தும் முகவர் வடக்கு மாகாண சபையாகும்.

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு : அநுர தலைமையில் அடிக்கல் நாட்டி வைப்பு | President Anura Visit To Mannar District Hospital

இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 09.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டதுடன், மத்திய சுகாதார அமைச்சுக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான உள்ளக உடன்படிக்கை 10.11.2025 அன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

புதிய கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி. ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்கள் மீது தாக்குதல்…! இளைஞர்குழு அட்டகாசம்…!

பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்கள் மீது தாக்குதல்…! இளைஞர்குழு அட்டகாசம்…!

நிகழ்வில் கலந்துகொண்டோர்

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெறும் இந்தப் புதிய முதலீடு, விபத்துக்கள் மற்றும் அவசர மருத்துவ நிலைமைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்கும் திறனை மேம்படுத்துவதுடன், மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு மருத்துவ சேவைகளை ஒரே கட்டமைப்பின் கீழ் மேலும் ஒழுங்குபடுத்துவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு : அநுர தலைமையில் அடிக்கல் நாட்டி வைப்பு | President Anura Visit To Mannar District Hospital

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நாட்டி வைத்தனர்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மன்னார் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், நகர சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மருத்துவ மனையின் அத்தியட்சகர், மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் : தமிழரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக அரியநேத்திரன் வழக்கு தாக்கல்!

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் : தமிழரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக அரியநேத்திரன் வழக்கு தாக்கல்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016