ரணில் தொடர்பில் மகிந்தவின் சகா வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தங்களின் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அடைய முயற்சிப்பது நெறிமுறையற்றது.
இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவை பாதிக்கும்
எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த அரச எதிர்ப்புப் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரத் தொடங்கிய காலகட்டம் இதுவாகும். இதுபோன்ற போராட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் சுற்றுலாவை பாதிக்கும் என்றார்.
தற்போதைய அதிபர் பதவியேற்று கடந்த நான்கு மாதங்களுக்குள் எரிபொருள், எரிவாயு, அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சரியான பாதையில் நாடு
“அதிபர் நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்கிறார். எனவே, பொருளாதாரத்தை நிர்வகிக்கவும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு தீர்வுகளை வழங்கவும் எம்மால் முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார். “எதிர்க்கட்சிகள் இதுபோன்ற வழிகளில் அதிகாரத்திற்கு வர முயற்சிப்பது நெறிமுறையற்றது,” என்று அவர் மேலும் கூறினார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
