பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சுமந்திரன்

Jaffna M A Sumanthiran Presidential Update
By Shadhu Shanker May 27, 2024 03:22 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

பொதுவேட்பாளர் நியமிப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் விசேட கூட்டத்தை அடுத்தமாதம் 9 ஆம் திகதி யாழில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் அனைவரையும் பங்கெடுக்குமாறும்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறு யாழ் ஊடக அமையத்தில் இன்று(27) நடாத்திய ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினரும்  அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது.. "கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில்(Jaffna) சந்திப்பொன்றை நான் மேற்கொண்டிருந்தேன்.

அதாவது தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது சம்பந்தமாக முனைப்பாக செயற்பட்டு கொண்டிருக்கிற சிவில் சமூகத்தினர் சில பத்தி எழுத்தாளர்கள் என்னை சந்திக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார்கள்.

தமிழரசுக் கட்சியின் மாநாடு வழக்கில் இரு தரப்பாக பிரிந்த சிறீதரன் - மாவை

தமிழரசுக் கட்சியின் மாநாடு வழக்கில் இரு தரப்பாக பிரிந்த சிறீதரன் - மாவை

கலந்துரையாடல்

அவர்களோடு நிறைவான கருத்துமிக்க கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இந்த யோசனைக்கு மாறாக நான் தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தமாக அதனுடைய காரணங்களை எடுத்துச் சொல்லியிருந்தேன்.

பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சுமந்திரன் | President Election Tamil Candidate Sumanthiran

இந்த சூழ்நிலையிலே இப்படியானதொரு முன்னெடுப்பு செய்வதற்கான தங்களுடைய காரணங்களையும் அவர்கள் எங்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தின் இறுதியில் இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பொதுவெளியிலே பகிரங்கமாக ஆரோக்கியமான முறையிலே கருத்து பரிமாற்றம் செய்வது நல்லது என்கின்ற என்னுடைய யோசனையை அவர்களிடத்தே நான் சொன்னபோது அவர்களும் அதனை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார்கள்.

சென்றவாரம் அல்லது நேற்றைய தினம் அப்படியொரு கூட்டத்தை ஒழுங்கு செய்ய நான் நினைத்திருந்தாலும் கூட சில பல காரணங்களினாலே அது பிற்போடப்பட்டிருக்கிறது.

கனடாவில் வசிக்க பாதுகாப்பான நகரங்கள்: வெளியானது தரவரிசை பட்டியல்

கனடாவில் வசிக்க பாதுகாப்பான நகரங்கள்: வெளியானது தரவரிசை பட்டியல்

பொதுவேட்பாளர்

இப்பொழுது வருகிற யூன் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் பாரியளவிலான கூட்டமொன்று இரு தரப்பு நியாயங்களையும் ஆரோக்கியமான முறையிலே கருத்துக்களை பரிமாறுகிற வகையில் செய்வதற்கு நான் ஒழுங்கு செய்திருக்கிறேன்.

பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சுமந்திரன் | President Election Tamil Candidate Sumanthiran

இரு தரப்பில் இருந்தும் சிலரை அந்தக் கட்டத்தில் தங்களுடைய கருத்துக்களை முன்வைக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறேன். அப்படியான உரையாடல் நடைபெறுவது நல்லது.

ஏனென்றால் பொது மக்களுக்கும் இதனுடைய சாதக பாதகங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இதைக் குறித்து மக்களுடைய மனதிலே எப்படியான சிந்தனைகள் இருக்கிறதென்பதையும் நாங்களும் ஒரு அளவுகோளிட்டு அறியக் கூடியதாக இருக்கும்.

ஆகவே ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசாமல் இதற்குப் பின்னணியில் இது இருக்கிறது அதற்குப் பின்னணியில் அது இருக்கிறது என்ற இந்தப் பின்னணிக் கதைகள் எல்லாம் விடுத்து சரியான விதத்தில் ஒரு கருத்துப் பரிமாற்றம் செய்வது நல்லது. அதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்குகிறோம்.

 விசேட கூட்டம்

எனவே தயவுகூர்ந்து அனைவரும் அந்த ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாற்ற சூழலை பேணுமாறு மிகவும் அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சுமந்திரன் | President Election Tamil Candidate Sumanthiran

இப்படியான விடயங்களிலே நாங்கள் எடுக்கிற தீர்மானங்கள் மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதிலே மக்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்.

ஆகவே இந்த விடயத்தை நாங்கள் ஒரு முன்னுதாரணமாக வைத்து ஐனநாயக வழியிலே எப்படியாக கருத்து பரிமாற்றங்களை ஒருவரை ஒருவர் வெளிப்படைத் தன்மையோடு பேச முடியும் என்பதையும் இதன் மூலம் நாங்கள் வெளிப்படுத்த முடியும்.

ஆகையினாலே அடுத்தமாதம் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கிறேன்" என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025