மிஸ்டர் பீன் போல செயற்படும் ரணில்... சபையில் விமர்சித்த விஜேசிறி
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைக்கு கட்டுப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையானது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றில் இல்லாதபோது, சபைக்கு வரும் ரணில் விக்ரமசிங்க, அவர்களை கேலிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறார் எனவும் குற்றம் சுமத்தினார்.
நிலையியற் கட்டளை மீறல்

மேலும் கருத்து வெளியிட்ட விஜேசிறி “மிஸ்டர் க்ளீன் என்று சொல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க, இன்று மிஸ்டர் பீன் ஆக செயற்படுகிறார்.
நாடாளுமன்றத்துக்கு வரும் அதிபர் நிலையியற் கட்டளையை மீறினால், தாம் நிலையியற் கட்டளையை மீறவேண்டியிருக்கும்
டொலர் கையிருப்பை அதிகரிப்பதாக பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு இதுவரைக்கும் அதனை நிறைவேற்ற முடியவில்லை”என்றும் அவர் குறிப்பிட்டார்.