அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா: தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறி
COVID-19
Joe Biden
World
By Thulsi
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா (covid 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
81 வயதான ஜோ டைனுக்கு (Joe Biden) இதற்கு முன்னதாகவும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.
நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிமொக்ரடின் கட்சி சார்பில் பைடன் களமிறங்கவுள்ளார்.
கொரோனா தொற்று உறுதி
இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தேர்தலில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சளி மற்றும் இருமல் காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு பைடன் உட்படுத்தப்பட்ட நிலையில், இவ்வாறு கொரோனா உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, பைடன் தற்போது டெலாவேரில் உள்ள ரெஹோபோத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்