இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் கல்வித் தளம்
இலங்கையில் இலவச கற்கைநெறிகளைக் கண்டறிவதற்கும், இலகுவான கல்வி மற்றும் தொழில்சார் இலக்குகளை டிஜிட்டல் முறைகள் மூலம் அடைவதற்கும் இலகுவான வகையில் டிஜிட்டல் கல்வித் தளம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) publiclearn.lk எனும் டிஜிட்டல் கல்வி தளத்தை ஜூலை 13ஆம் திகதி அதிபர் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
பப்ளிக் லேர்ன் என்பது உலகின் சில முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இலவசப் படிப்புகளுக்குப் பயனர்களுக்கு வழிகாட்டுகின்றதும் ஒரே இடத்தில் இருந்து பல சேவைகளை வழங்குவதும் (one-stop shop) ஆகும்.
இலங்கையர்களுக்கு வாய்ப்பு
டிஜிட்டல் கல்வித் தளமானது ரீஜண்ட் குளோபல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தளமானது எந்தவொரு பாடத்திலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்களை கற்பதற்கு தூண்டாமல் விட்டாலும், வெளிப்புறக் கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கற்றலை ஜனநாயகமாக்குகிறது.
வெளிப்புற கல்வி என்பது புதிய அறிவைப் பெறுவதற்கான செயல்முறையாகும், குறித்த தளமாளது இலங்கையர்களுக்கு உள், வெளிக் கல்வியை வழங்கும் பல விதமான கற்றல்களுக்கான அணுகலையும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |