அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் ரணில் விடுத்த கோரிக்கை..!
Ranil Wickremesinghe
President of Sri lanka
Sri Lankan political crisis
By Kanna
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிபர் ஊடகப்பிரிவு குறித்த விடயத்தினை அறிவித்துள்ளது.
இன்று (29) காலை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலின் விசேட உரை
இதேவேளை, 9 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் அதிபர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 3 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க குறித்த உரையை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

