சிங்கப்பூரில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் சிறிலங்கா அதிபர்
பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பு
சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் (Ng Eng Hen) ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது, பூகோள அரசியல் மேம்பாடுகள் மற்றும் கடல்சார் நாடுகளின் பிராந்திய ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
சிங்கப்பூர் அதிபருடனான சந்திப்பு
சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டுஅதிபர் ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (21) அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணமானார்.
மேலும் குறித்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் , சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென் , நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் ஆகியோருடனும் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
