மைத்திரி வசித்த இல்லத்தில் குடியேறவுள்ள ரணில்
Maithripala Sirisena
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Steephen
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன வசித்து வந்த, கொழும்பு பெஜெட் வீதியில் உள்ள இல்லத்தை புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சொந்த வீடு எரிப்பு - பாதுகாப்பான இடத்தில் வசிக்கும் ஜனாதிபதி
அதிபர் மாளிகை மற்றும் அலரி மாளிகை என்பன தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் அவற்றில் குடியேற முடியாத நிலைமை காணப்படுகிறது.
இதனால், ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால வசித்து வந்த இல்லத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு காரணமாக மைத்திரிபால சிறிசேன இந்த இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
