தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் : பல்டியடித்தார் ரணில்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக 1,700 ரூபாவைப் பெற்றுத் தருவதாக தாம் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ”பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனத்தை நிர்ணயிக்கும் நடவடிக்கைகளை, தொழில் அமைச்சு, வேதன நிர்ணய சபையின் ஊடாக மேற்கொண்டிருந்தது.
விவசாய முறைமை
தோட்டத்துறை என்ற பழைமையான விடயத்தை என்னிடம் கூற வேண்டாம். தற்போது விவசாய முறைமையே கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்கீழ் இலாபமீட்டி தொழிலாளர்களை பராமரிக்க முடியாத நிறுவனங்களிடம் இருந்து தோட்டக் காணிகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தோட்டப் பகுதிகளில் உள்ள லயன் அறைகள் அமைந்துள்ள காணிகளைக் கிராமங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |