அமெரிக்கா மற்றும் கியூபாவிற்கு பயணமாகவுள்ள ரணில்
Ranil Wickremesinghe
United States of America
Cuba
By Kathirpriya
அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில், இந்த மாதம் 18 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகளின் 78வது பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுவதற்காக அதிபர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா பயணமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நியூயோர்க் செல்வதற்கு முனனர் கியூபாவிற்கு செல்ல தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
G77 உச்சிமாநாடு
இந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடைபெறவுள்ள G77 உச்சிமாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்பார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்