தேர்தல் தொடர்பில் தனது தனிப்பட்ட தீர்மானத்தை அறிவித்த மகிந்த
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
By Dilakshan
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது அவரது தனிப்பட்ட கருத்து எனவும் கட்சியின் தீர்மானத்தின் பின்னர் இது தெரிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பொதுத் தேர்தலின் பின்னர் அதிபர் தேர்தலை நடத்துவது தொடர்பில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர் வேட்பாளர்
இந்நிலையில், அடுத்த சில வாரங்களுக்குள் முதலில் எந்தத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து அரசாங்கத் தலைவர்களுடன் கலந்துரையாடி நாட்டுக்கு அறிவிப்பேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானிக்கப்படுமென அவர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 23 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்