ஜனாதிபதித் தேர்தல்: வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 22 பேர் காவல்துறைப் பாதுகாப்பைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயத்தை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், அனைத்து வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீடு தற்போது இடம்பெற்று வருவதாகவும், அதற்கேற்ப வழங்கப்படும் பாதுகாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் குழு வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
ஜனாதிபதிக்கான
இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான (Ranil Wickremesinghe) பாதுகாப்பு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினால் வழங்கப்படுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மையமாகக் கொண்டு செயல் படுத்தும் குழுவின் தலைவராக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க (Viyani Gunathilaka) உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |