அதிபர் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
Sri Lankan Peoples
Sri Lanka Presidential Election 2024
By Dilakshan
9 months ago
அதிபர் தேர்தல் அறிவிப்பை ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க (Saman Rathnayake) தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, அதிகாரம் கிடைத்த பிறகு தேர்தலுக்கான திகதியை ஆணையம் அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு தயார்
அத்துடன், தேர்தல் ஆணையம் எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இந்த தேர்தலுக்கு பயன்படுத்த முடியும் எனவும் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி